Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

Advertiesment
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

vinoth

, புதன், 5 பிப்ரவரி 2025 (07:19 IST)
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் புஷ்பலதா. 1961 ஆம் ஆண்டு வெளியான செங்கோட்டை சிங்கம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புஷ்பலதா தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய சக நடிகரான ஏவிஎம் ராஜனை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான பூவாசம் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

சென்னையில் வசித்துவந்த புஷ்பலதா வயது மூப்புக் காரணமாக சில உடல்நல உபாதைகளுக்கு ஆளாகிவந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 87. அவரின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!