இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக முன்னேறி வருகிறார் ரண்வீர் சிங். அவர் நடித்த கல்லி பாய் மற்றும் சிங்கம் உள்ளிட்ட படங்கள் வரிசையாக ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் ஆதித்யா தர் இயக்கத்தில் துரந்தர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அர்ஜுன் நடிக்க, மாதவன், அக்ஷய் கன்னா உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த நிலையில் படப்பிடிப்பில் பணியாற்றிய சுமார் 120 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடக்கம்.
ஞாயிற்றுக் கிழமை படப்பிடிப்பில் வழங்கப்பட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் போனதால் பலருக்கும் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிர்ச்சனைகள் வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் சிலர் உடல்நலம் தேறி வீடு திரும்பி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.