Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் ஜப்பான் படத்தின் பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

கார்த்தியின் ஜப்பான் படத்தின் பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:28 IST)
j

கார்த்தி நடிப்பில் அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. படத்தின் முக்கியக் காட்சிகளுகாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஒரு கிராமத்தையே செட்டாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது அங்கு மொத்த ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “படத்தில் ஷான் ரோல்டன் குரலில் மெலடி பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளேன். எனது சினிமா கேரியரில் மிகச்சிறந்த பாடலாக அது இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர்' படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள்