தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் ஜெயிலர் படத்திலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யுடன் தான் நடித்த ஒரே படமான சுறா படத்தின் தோல்வி குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “சுறா படத்தில் எனது நடிப்பு சரியில்லை என்று எனக்கு ஷூட்டிங்கின் போதே தெரிந்தது. சில படங்களில் அது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு படத்தை ஒத்துக்கொண்டால் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டும். அதில் பலரின் பொருளாதாரம் அடங்கியுள்ளது. அது வேலையின் ஒரு பகுதி” எனக் கூறியுள்ளார்.