மே மாதத்துடன் கொரோனா க்ளோஸ் - நடிகர் விவேக் வீடியோ வெளியிட்டு உறுதி!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:40 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மக்களுக்கு கொரோன வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் " சிங்கப்பூர்ல இருந்த வந்த சமீபத்திய ஆய்வின்படி, மே மாத இறுதியில கொரோனாவுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க, உலகத்துக்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு. எனவே நாம் தமிழக அரசுடனும்,  இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால். நன்றி. என்று இந்த வீடியோவில் பேசி முடித்துள்ளார். இதன் மூலம் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ...

நன்றி @jayatvdottv https://t.co/xXEj833E0O

— Vivekh actor (@Actor_Vivek) April 27, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாம்பு உடையில் பரவசப்படுத்தும் பார்வதி நாயர் - கவர்ச்சி க்ளிக்ஸ்!