ஆந்திர ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 27,890 பேர்களுக்கு கொரொனா பாதிப்பும் 881 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தற்போது சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவிய நான்கு பேர்களில் ஒருவர் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்
இதனையடுத்து ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் என்பவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் அதுவும் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கே கொரோனா தொற்று பரவியுள்ளது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது