இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் ஐந்து வருடமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு ரிலீசாகாமல் இருந்தது
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
	 
	மார்ச் 5ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
	 
	எஸ்ஜே சூரியா ரெஜினா நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது