Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் ஹாலிவுட்டுக்கு சென்றாலும் நாங்கள் பிரதர்ஸ்தான்… செல்வராகவன் பதில்!

தனுஷ் ஹாலிவுட்டுக்கு சென்றாலும் நாங்கள் பிரதர்ஸ்தான்… செல்வராகவன் பதில்!
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:15 IST)
நடிகர் அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன் தனது சகோதரரின் வளர்ச்சிக் குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இப்போது சாணிக்காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராகவும் களம் காணுகிறார். இதற்கிடையில் தனுஷை வைத்து அவர் இயக்கும் நானே வருவேன் படத்தின் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘தனுஷ் தேசிய விருது வாங்கி இருந்தாலும், ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தாலும் நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சகோதரர்கள்தான்’ எனக் கூறியுள்ளார்.

தனுஷின் ஆரம்ப கால கதைகளை வடிவமைத்ததில் செல்வராகவனின் பங்கு அளப்பரியது. அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்கள் தனுஷின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் இறுதிச் சடங்குக்கு வரவண்டும்… ரசிகரின் தற்கொலைக் கடிதத்துக்கு யாஷ் பதில்!