Publish Date: Mon, 19 Jul 2021 (17:22 IST)
Updated Date: Mon, 19 Jul 2021 (17:25 IST)
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற காலத்தினால் அழியாத புகழ்பெற்ற நாவலை திரைப்படமாக்க முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது இந்த போஸ்டர் மிக அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
siva
Publish Date: Mon, 19 Jul 2021 (17:22 IST)
Updated Date: Mon, 19 Jul 2021 (17:25 IST)