Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவரசா டிரைலருக்காக இவ்வளவு செலவா? பணத்தை வாரி இறைத்த மணிரத்னம்!

நவரசா டிரைலருக்காக இவ்வளவு செலவா?  பணத்தை வாரி இறைத்த மணிரத்னம்!
, வெள்ளி, 16 ஜூலை 2021 (09:52 IST)
நவரசா ஆந்தாலஜியின் டிரைலருக்காக சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த ஆந்தாலஜியின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த டிரைலர் பற்றி இப்போது சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை உருவாக்கியது மரியான் படத்தின் இயக்குனர் பரத்பாலாவாம். இதற்காக உயர்ரக வெளிநாட்டு கேமிராக் கொண்டு 70 லட்சம் செலவு செய்து படமாக்கியுள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப்ஸியை துரத்தும் வெங்கட்பிரபு… பிரேம்ஜிக்கு அடித்த லக்!