Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் பந்து வீச்சாளரை கிண்டல் அடித்த யுவராஜ் சிங் !

Advertiesment
பாகிஸ்தான் பந்து வீச்சாளரை கிண்டல் அடித்த  யுவராஜ் சிங் !
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (17:38 IST)
ஆஸ்திரேலியா  - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஆசஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 வது டெஸ்டின் போது,  ஜோப்ரா ஆர்சர் வீசிய பவுன்சரில் ஆஸ்திரேலியா  பேட்ஸ்மேன் சுமித் தலையை பதம் பார்த்தது. இதில்  நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே விழுந்தார். 
பின்னர் அவருக்கு பதிலாக டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.  இதுகுறித்து சோயீப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கிரிக்கெட்டில் பவுன்சர் பந்து வீசுவது சாதாரணம் தான். ஆனால் அப்பந்து பேட்ஸ்மேனை தாக்கினால் சம்பிரதாயத்துக்காக அவரை நலம் விசாரிக்க வேண்டும். சுமித் விவகாரத்தில் ஆர்சர் செய்தது தவறு. சுமித் வலியால் துடித்தபோது ஆர்ச்சர் சென்று பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
நான் கிரிக்கெட்டில் பவுன்சர் பந்து வீசி யாராவது தாக்கப்பட்டால், அவரிடம் சென்று நலம் விசாரிப்பேன். இதை நான் முதலில் இருந்து வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
webdunia
இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ் ஒரு கிண்டல் டுவிட் செய்துள்ளார். அதில் நீங்கள் முதலில் ஓடிவந்து நலம் விசாரிப்பீர்கள்... இன்னும் நிறைய பவுன்சர்கள் போடுவதற்கு திட்டமிட்டு இருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு…பிசிசிஐ அதிரடி நடவடிக்கை