Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்கத்து நாடு வரை ஒலித்த குரல்: பாகிஸ்தான் பார்வையில் ஸ்டாலின்!!

Advertiesment
பக்கத்து நாடு வரை ஒலித்த குரல்: பாகிஸ்தான் பார்வையில் ஸ்டாலின்!!
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (16:48 IST)
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திமுக போராட்டம் பாகிஸ்தான் வரை வைரலாகியுள்ளது. 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. 
 
காஷ்மீர் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். 
webdunia
வரும் 22 ஆம் தேதி இந்த போராட்டத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்வத உறுதிப்படுத்தியுள்ளனர். 
 
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த தகவல் பாகிஸ்தான் வரை சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசு ரேடியோ தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகளை பாகிஸ்தான் கவனித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. இதனால், ஸ்டாலின் நாடு விட்டு நாடு கவனம் பெற்றுள்ளதாக திமுகவினர் பெருமை அடைந்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்டு மட்டுமே கணவருக்கு உணவு.. மனைவியின் விநோத செயல்