Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் விவகாரம்: டிரம்புடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

காஷ்மீர் விவகாரம்: டிரம்புடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (21:04 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி சற்றுமுன் தொலைபேசியில் சுமார் 20 நிமிடங்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்தது ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட ஆதரவு தராத நிலையில் சீனா மட்டுமே மறைமுக ஆதரவை அளித்து வருகிறது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார். 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சனையால் ஆசியாவில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்தும், மாற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார்.
 
webdunia
மேலும் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுவதாகவும், .ஆசிய பிராந்தியத்தில் உள்ள சில தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியிடம் இந்த விஷயத்தில் அமெரிக்கா, இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரிடம் பேசியுள்ளது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்விகி, ஸொமாட்டோவிலிருந்து விலகிய 1200 உணவகங்கள்: காரணம் இதுதானாம்?!