டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன்கள் இலக்கு
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
									
										
			        							
								
																	
	 
	இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர் 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்தநிலையில் 187 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. அந்த அணி சற்று முன் வரை 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது