Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி கோவிட் ஒரு பொருட்டல்ல… ஐசிசி கொண்டு வந்த மாற்றம்!

Advertiesment
T20 World Cup
, திங்கள், 17 அக்டோபர் 2022 (12:04 IST)
டி20 உலகக்கோப்பைக்காக ஐசிசி  கிரிக்கெட் வாரியம் கோவிட் விதிகளை கணிசமாக தளர்த்தியுள்ளது.

 இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணி ரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் ஐசிசி  கிரிக்கெட் வாரியம் கோவிட் விதிகளை கணிசமாக தளர்த்தியுள்ளது. ஆம் கோவிட் பாசிட்டிவ் கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க ஐசிசி அனுமதித்துள்ளது. வீரர்களுக்கு கட்டாய கோவிட் சோதனை என்பதனை தளர்த்தியுள்ளது.

மேலும், போட்டியில் ஒரு வீரர் கொரோனா வைரஸுக்கு சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அந்த வீரர் விளையாட்டில் பங்கேற்பது பொருத்தமானதா என்பதை குழு மருத்துவர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?