கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது
	
 
									
										
								
																	
	
	இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
			        							
								
																	
	தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,060 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,30,888 ஆக உயர்ந்துள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,905 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,75,149 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 26,834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.