Publish Date: Tue, 27 Apr 2021 (12:11 IST)
Updated Date: Tue, 27 Apr 2021 (12:20 IST)
ஆர் சி பி அணி இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணியோடு மோத உள்ளது.
இந்த சீசனின் ஆரம்பத்தில் தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது கோலி தலைமையிலான ஆர் சி பி அணி. ஆனால் கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி அணியோடு மோத உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்துக்கு வர கடுமையாக முயற்சி செய்யும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.