இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 248 ரன்களில் சுருண்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து விளையாடுகிறது.
இன்றைய ஆட்ட நேரம் முடிவில் மேற்கிந்த தீவுகள் அணி 49 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பில் 87 ரன்கள் அடித்தும், சாய் ஹோப் 66 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்சில் மளமள என விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இரண்டாவது இன்னிங்சில் இன்னும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.