தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் 26 5 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்டப்ஸ் அபாரமாக விளையாடிய 76 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பின் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூரன் அதிரடி காரணமாக 17.5 ஓவரில் இலக்கை எட்டி மேற்கண்ட தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.