Publish Date: Sat, 24 Aug 2024 (09:46 IST)
Updated Date: Sat, 24 Aug 2024 (09:47 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இன்று திடீரென மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 35 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 280 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை குறித்து தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 6,695 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து ரூபாய் 53,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 93.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 93,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது