Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்ல விமர்சனங்களைப் பெற்றும் திரையரங்கில் ஜொலிக்காத ‘ஜமா’…. தற்போது பிரபல ஓடிடியில்!

நல்ல விமர்சனங்களைப் பெற்றும் திரையரங்கில் ஜொலிக்காத ‘ஜமா’…. தற்போது பிரபல ஓடிடியில்!

vinoth

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:54 IST)
நிலவியல் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்தை எடுத்து வெளியிட்டது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.

இந்த படத்தை பாரி இளவழகன் எழுதி இயக்க, அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் சேத்தன் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை.

திருவண்ணாமலையை ஒட்டிய பகுதிகளில் இன்றளவும் தீவிரமாக இயங்கும் தெருக்கூத்து கலையைக் கதைக்களமாகக் கொண்டு அதன் பின்னணியில் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் கதையை உருவாக்கியிருந்தார். தன்னுடைய நடிப்பு சிறப்பாகத் தெரிய அவர் எடுத்துக்கொண்ட முனைப்பை திரைக்கதை உருவாக்கத்தில் காட்டவில்லை. அதுவும் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ஜமா திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியின் தாய்ப்பாலை திருடிக் குடித்தாரா பிரபல பாலிவுட் நடிகர்?... புத்தகத்தால் கிளம்பிய சர்ச்சை!