ரஞ்சி கோப்பை நாயகன் என வர்ணிக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் இப்போது அனைத்துவிதமானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஜாபர் அறியப்பட்டது ரஞ்சிக் கோப்பை போட்டிகள் மூலமாகதான். ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை வாசிம் ஜாபருக்கு வசம் உள்ளது. அவர் இதுவரை 256 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 19410 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 57 சதங்களும் 91 அரை சதங்களும் அடக்கம்.
42 வயதாகும் ஜாபர் தனது ஓய்வு முடிவை இப்போது அறிவித்துள்ளார். மேலும் ‘எனது திறமைகளை மேம்படுத்த உதவிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், சகவீரர்கள் அனைவருக்கும் நன்றி. எனது முதல் இன்னிங்ஸ் தான் முடிந்துள்ளது. அடுத்த இன்னிங்ஸ்க்காக காத்திருக்கிறேன். அது வர்ணனை அல்லது பயிற்சியாளர் என்ற வடிவங்களில் இருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காகவும் 31 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஜாபர் ஒரு இரட்டைசதம் உள்பட 1944 ரன்கள் சேர்த்துள்ளார்.