நடிகர் ஆர்யா இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுப்படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படம் 1970 காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்த படத்தில் டைட்டில் சல்பேட்டா என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
குத்துசண்டை வீரராக நடைக்கும் ஆர்யா இந்த படத்திற்காக கடந்த 7 மாதங்களாக தீவிர உடற்பயிற்சி செய்து தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளார். மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வரும் ஆர்யா அடிக்கடி வெறித்தனமான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் தற்போது 7 மாதங்களுக்கு முன் தொந்தியும் தொப்பையுமாக இருந்த உடலையும் இப்போது கடுமையான உடற்பயிற்சி செய்து கட்டான தோற்றத்தில் உள்ள உடலையும் பதிவிட்டு எனது ஜிம் பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஜெய், ஜான்சன், சந்தோஷ், திரு, பிரசாத் என எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். மேலும் மெட்ராஸ் பட கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் பட வில்லன் ராமச்சந்திரா ராஜு வில்லனாக நடித்துள்ளார்.