Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

Siva
புதன், 20 ஆகஸ்ட் 2025 (15:41 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம், ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்றை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லாகூரில் உள்ள தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்தில் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
 
முகமது ஃபைஸ் என்பவர் வாசிம் அக்ரம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "பாஜி" என்ற வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக வாசிம் அக்ரம் செயல்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சூதாட்ட செயலியின் விளம்பரப் புகைப்படங்களிலும் காணொலிகளிலும் வாசிம் அக்ரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரம் குறித்து வாசிம் அக்ரம் இதுவரை எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதே சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாக பிரபல டிக்டாக் மற்றும் யூடியூப் நட்சத்திரமான சாத்-உர்-ரஹ்மான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் வாசிம் அகரமும் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments