Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"வீழ்த்த முடியாத வீராங்கனை வினேஷ் போகத்".! மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பெருமிதம்.!!

Advertiesment
Vinesh Pogath

Senthil Velan

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
வீழ்த்த முடியாத வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்து வந்தார் என்று மக்களவையில் பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது. இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் சங்கத்திற்கு அழுத்தம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
 
இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

webdunia
இது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் என்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேசி உள்ளதாகவும் அவர் கூறினார்.

 
இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்து வந்தார் என்றும் வினேஷ் போகத்திற்கு தேவைப்பட்டால் கூடுதலாக நிதி உதவி செய்யப்படும் என்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் பெறுவார்.. வினேஷ் போகத் குறித்து மாமா நம்பிக்கை..!