Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வினேஷ் போகத் தகுதி நீக்கம் துரதிஷ்டவசமானது..! ராகுல் காந்தி வருத்தம்..!

Advertiesment
Rahul

Senthil Velan

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (14:59 IST)
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத்தின் பதக்க கனவு தகர்ந்ததால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

அதன்படி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

 
நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ் என  தெரிவித்துள்ள அவர், இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்தை அடுத்து பிரிட்டனிலும் வன்முறை.. இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..!