Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூளை இல்லாத செயல் - முன்னாள் வீரர்கள் ஹோல்டருக்கு ஆதரவு!

மூளை இல்லாத செயல் - முன்னாள் வீரர்கள் ஹோல்டருக்கு ஆதரவு!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (09:06 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள ஹோல்டருக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. சமீபகாலமாக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வரிசையாக சொதப்பி வருகிறது. இந்தத் தொடர் வெற்றியின் மூலம் மீண்டும் தன்னை ஒரு வலுவான் அணியாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியையும் கேப்டன் ஹோல்டரையும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்துவீசி போட்டியைத் தாமதப்படுத்தியதாகக் கூறி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டருக்கு ஐசிசி அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்திள்ளது. இந்தத் தடைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
webdunia

ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வார்ன் ‘குறிப்பிட்ட டெஸ்ட் 3 நாட்களிலேயே முடிந்து விட்டது. இந்த தடைக்கு எதிராக ஹோல்டர் மேல்முறையீடு செய்ய வேண்டும். இது ஒரு மூளை இல்லாத செயல்… அவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று.’ என தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதேப் போல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் ‘246 ஓவர்களில் போட்டியையே முடித்து விட்டார்கள். அதாவது இரண்டரை நாட்கள். ஆனால் ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டது துரதுர்ஷ்டமே. ஆட்டம் தன்னைத் தானே கைவிட்டு விட்டது’ எனக் கூறியுள்ளார்.

ஹோல்டருக்குத் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவை அடுத்து அவர் மீதான தடை விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி