Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி – தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !

இரண்டாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி – தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (09:08 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி ஆண்ட்டிகுவாவில் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது.

முதல் டெஸ்ட்டில் மோசமாக விளையாடித் தோற்ற இங்கிலாந்து அணி இம்முறையும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 306 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டேரன் பிரவோ 50 ரன்களும் பிராத்வெய்ட் 49 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து  119 ரன்கள் பின் தங்கியது. அதைத் தொடர்ந்து தனது
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோஸ் பட்லர் மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் மற்றும் ஹோல்டர் தலா 4 விக்கெட்களும் ஜோசஃப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 14 ரன்களை இலககாகக் கொண்டு இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது. சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த தொடர் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியால் இடமாற்றம் செய்யப்பட்ட டி-20 போட்டி