Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் இறுதிபோட்டியை காண மைதானம் முன்பு குவிந்த ரசிகர்கள்!

Advertiesment
ipl final fans1
, ஞாயிறு, 29 மே 2022 (17:55 IST)
ஐபிஎல் இறுதிபோட்டியை காண மைதானம் முன்பு குவிந்த ரசிகர்கள்!
கடந்த சில மாதங்களாக ஐபிஎல் திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் இன்றுடன் ஐபிஎல் போட்டி முடிவுக்கு வருகிறது
 
இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பதும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த போட்டி தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
webdunia
முன்னதாக இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்பதும் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் இறுதி விழா நிகழ்ச்சியை காணவும் போட்டியை ரசிக்கவும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்
 
இதுவரை இல்லாத அளவுக்கு இறுதிப் போட்டியை காண்பதற்காக மிக அதிகமான ரசிகர்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: சாம்பியன் பட்டம் வெல்ல போவது குஜராத்தா? ராஜஸ்தானா?