தமிழ்சினிமாவில் முன்னனி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்66 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அவர்களுடன் சரத்குமர், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் குடும்ப கதையாக இருப்பதாக தகவல் வெளியானதால் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யின் மாறுபட்ட நடிப்பை இதில் காணலாம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜய்66 படத்தைத் தயாரிக்கும் தில்ராஜுதான் ஷங்கர் – ராம்சரண் படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படம் மாதத்திற்கு 1 நாட்கள் மட்டுமே ஷூட்டிங்க் நடந்து வரும் நிலையில் விஜய்யின் விஜய்66 படத்தின் ஷூட்டிங்க் முழு வீச்சில் நடந்து வருகிறது.
விஜய்66 படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் அத்வைத் வினோத் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.