இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறைக் கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ளது. தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் இது குறித்துப் பேசியுள்ளார். அதில் “தோனி ஓய்வுபெறப் போவதில்லை. அடுத்த சீசனில் அவர் கண்டிப்பாக விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார். இது சி எஸ் கே ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.