Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-2- கிரிக்கெட் போட்டி: இந்தியா அணி சூப்பர் வெற்றி

Advertiesment
டி-2- கிரிக்கெட் போட்டி:  இந்தியா அணி சூப்பர் வெற்றி
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (23:11 IST)
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையேயான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி 6  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இன்று இரண்டாவது டி-20 போட்டி நடந்தது,  இந்த இப்போட்டியில்   மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஆனது.

இன்றைய போட்டி தாமதமாகத் தொடங்கப்பட்டதால்,  8 ஓவர்களாக போட்டி நிர்ணயிக்கப்பட்டது.

முததலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், 8  விக்கெட் விக்கெட் இழப்பிற்கு 90  ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 91 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா அணியில், கே.எல்.ராகுல் 10 ரன்களும், ரோஹித் 46 ரன்களும், கோலி 11 ரன்களும், பாண்ட்யா 9 ரன் களும் அடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TI-20 கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தடுமாற்றம் !