5 ஆயிரம் வருடம் பாரம்பரிய இந்தியா பல் புராதண பெருமைகளை கொண்டாலும் நவீன தொழில்புரட்சிக் காலத்தில் தோல்வியுற்றது.ஆனாலும் கூட டிஜிட்டல் புரட்சியில் நிச்சயம் வெல்லும் என தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தொழில்புரட்சிய காலத்தில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனாலும் டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக வருவதாகத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் உற்பத்தி ஆலைகளாலும் இதற்கு உதாரணம், புதிய இந்தியா என்ற பாரத பிரதமரின் கொள்கையும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறினார்.
மேலும் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கிய ரிலையன்ஸும் அதற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக கூறினார்.