Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை ஹாக்கி: முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெல்ஜியம்

உலகக்கோப்பை ஹாக்கி: முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெல்ஜியம்
, திங்கள், 17 டிசம்பர் 2018 (07:51 IST)
கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி போட்டியில் பெல்ஜியம் - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை கோல் போடவில்லை என்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டதுஜ்.

இதிலும் இரண்டு அணிகளும் 2-2 கோல்கள் போட்டதால் சமநிலை ஏற்பட்டது. இதனையடுத்து ‘சடன்டெத்’ என்ற முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த முறையில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
webdunia

47 ஆண்டு கால உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு சதத்தில் தான் யாரென்று உலகிற்கு நிரூபித்த விராட் கோலி!