Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னாவ எடுங்க சிஎஸ்கே ரசிகர்களும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம்… குஜராத் டைட்டன்ஸுக்கு கோரிக்கை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:35 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி எஸ் கே அணியின் தூண்களில் ஒருவருமான சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.     

அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உண்டானது.

இந்நிலையில் இப்போது குஜராத் அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்தின் ஜேசன் ராய் பயோ பபுளில் இருக்க முடியாத சூழலால் தொடரில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக ஏலத்தில் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் ரெய்னாவின் ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தை ரசிகர்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். பலரும் அந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை டேக் செய்து ‘ரெய்னாவை எடுத்தால் உங்கள் ப்ராண்ட் மதிப்பு அதிகமாகும்’ ‘அவரை எடுத்தால் பாதி சி எஸ் கே ரசிக்ர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்’ என்றெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திட்டம் இதுதான்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

பாகிஸ்தான் வருவதில் இந்திய அணிக்கு என்ன பிரச்சனை?... கிரிக்கெட் வாரியத் தலைவர் கேள்வி!

ஷமி அடுத்த விமானத்திலேயே ஆஸ்திரேலியா செல்லவேண்டும்… கங்குலி கருத்து!

கோலிக்குப் பிறகு ரிஷப் பண்ட்தான்… அவர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. கங்குலி புகழாரம்!

இந்திய ஆஸ்திரேலியா தொடர்… அணியில் இடம் கிடைக்காததால் புஜாரா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments