ஸ்டீவ் ஸ்மித்தின் நேற்றைய சதம் – சில சாதனைத் துளிகள் !

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:19 IST)
ஸ்டீவ் ஸ்மித் நேற்று நடந்த முதல் ஆஷஸ் போட்டியில் சதம் அடித்ததின் மூலம் சச்சின்,கோஹ்லி, கவாஸ்கர் ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

நேற்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனியாளாகப் போராடி அந்த அணியை கௌரவமான ஸ்கோரை எட்டவைத்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த ஓராண்டாக விளையாடாமல் இருந்த ஸ்மித் தான் மீண்டும் வந்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

ஸ்மித் நேற்றையப் போட்டியில் 219 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 144 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 24 ஆவது சதமாகும். இந்த சதத்தை அவர் தனது 118-வது இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான  சச்சின்(125 இன்னிங்ஸ்), விராட் கோலி (123 இன்னிங்ஸ்) மற்றும் கவாஸ்கர் ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். டான் பிராட்மேன் மட்டுமே ஸ்டீவ் ஸ்மித்துக்கு முன்னர் 66 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் என்ன தம்பி உப்புத்தாள் வேணுமா? – வார்னரை கலாய்த்த பார்வையாளர்கள்