இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் விலக அதற்குப் பதிலாக பைஜு நிறுவனம் இணைய இருக்கிறது.
பிசிசிஐ குறிப்பிட்ட காலத்துக்கு ஏதாவது ஒரு நிறுவனத்துடன் டைட்டி; ஸ்பான்ஸர்ஷிப் செய்துகொள்ளும். அதன் படி ஸ்டார் நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக ஒப்போ நிறுவனத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு 5 வருடத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 2017 முதல் இந்திய அணியின் ஜெர்ஸிகளில் ஓப்போ பெயர் இடம்பெற்று வந்தது.
ஆனால் 5 வருடம் முடியும் முன்னரே ஒப்போ நிறுவனம் இப்போது டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து விலக உள்ளது. அதற்குப் பதிலாக கல்வி தொழில்நுட்ப ஆன்லைன் டியூட்டோரியல் நிறுவனமான ‘பைஜு’ பிசிசிஐ- உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி பைஜு லோகோவுடன் முதல் தொடரை விளையாட இருக்கிறது.