Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோஹ்லியின் ஒரு பதிவுக்கு 1.3 கோடி – இன்ஸ்டாகிராமிலும் கலக்கும் ரன்மெஷின் !

Advertiesment
கோஹ்லியின் ஒரு பதிவுக்கு 1.3 கோடி – இன்ஸ்டாகிராமிலும் கலக்கும் ரன்மெஷின் !
, வெள்ளி, 26 ஜூலை 2019 (11:15 IST)
கிரிக்கெட்டின் ரன்மெஷினாக இருந்து சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய கேப்டன் கோஹ்லி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் கிங்காக உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி தான் இறங்கி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி கலக்கி வருகிறார். இதனை ஒட்டி இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களோடு தொடர்பில் இருப்பதற்காக விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வலைதளமான இன்ஸ்டாகிராமில் கோஹ்லி மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இதில் அவ்வபோது பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவின் மூலமும் அவர் 1.3 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டுகிறார்.

உலகளவில் அதிகமாக இன்ஸ்டாகிராம் மூலம் வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 9 ஆவது இடத்தில் உள்ளார். இந்தப்பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு 6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துகுடி அணி த்ரில் வெற்றி