Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி..!

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி..!

Siva

, திங்கள், 15 ஜூலை 2024 (09:07 IST)
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமாக வெற்றி பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

24 அணிகள் பங்கேற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் தொடரின் இறுதிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடந்தது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் என்ற ஸ்பெயின் அணி இங்கிலாந்தை எதிர்கொண்ட நிலையில் இந்த போட்டி பரபரப்பாக நடந்தது.

இந்த ஆட்டத்தின் இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஏற்கனவே மூன்று முறை ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி, நான்காவது முறையாக வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அணியில் நிகோ வில்லியம் மற்றும் மைக்கேல் ஒயர்சபால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர் என்பதும் இங்கிலாந்து அணியில் கோல் பால்மர் மட்டும் ஒரே ஒரு கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு கால்பந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல கோடி செலவு செஞ்சிருக்கோம்… சாம்பியன்ஸ் கோப்பை எங்க நாட்டுலதான் நடக்கும்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி!