Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்- டேவிட் வார்னர்

Warner
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:34 IST)
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று    முன்தினம் குஜராத்- அகமதாபாத்தில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில்,  இந்திய அணி நிர்ணயித்த இலக்கை ஆஸ்திரேலியா அணி எட்டி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின்  டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான்  ஜோடி இணைந்து திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி 190க்கு மேல் ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.
எனவே  மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி கோப்பையை வசமாக்கியதுடன் ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இது  கோப்பையை வெல்லும் கனவில் இந்திய வீரர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற நிலையில் பிரதமர் மோடி வீரர்களின் டிரஸ்ஸின் ரூமிற்கு  சென்று ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தினார்.

இந்த நிலையில்,கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இறுதிப் போட்டி மிகச்சிறந்த ஆட்டமாக இருந்தது. இங்குள்ள ரசிகர்கள் சூழல் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்தியா மிகத்தீவிரமாக இந்த தொடரை நடத்தியது. அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி மற்றும் ராகுல் மனைவி பற்றி ஹர்பஜன் சிங் அடித்த கமெண்ட்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!