மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.
முதலாவது நாள் ஆட்டத்தின் கடைசி நேரம் என்பதால் பவுலர் ரபாடா களமிறங்கினார். முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பரிக்க அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் குவித்தது. மார்க்ரம் அவுட்டான பிறகு களமிறங்க வேண்டிய ஆம்லாவுக்கு பதில் பவுலரான ரபாடா களமிறங்கினார். களத்தில் நின்ற எல்கர் இடது கை பேட்ஸ்மேன். ரபாடாவும் இடது கை பேட்ஸ்மேன்.
இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம். பொதுவாக ஆட்டத்தின் கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் நைட் வாட்ச்மேன் என்று சொல்லக்கூடிய பேஸ்மேன் களமிறங்குவது வழக்கம். அதே போன்றுதான் நேற்று ராபாடா நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார்.
விக்கெட் வீழாமல் இருக்க தென் ஆப்பரிக்க ரபாடாவை ஒன் டவுனில் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் குவித்துள்ளது. புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது.