Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

400 டி-20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே வீரர்

Advertiesment
400 டி-20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே வீரர்
, வியாழன், 25 ஜனவரி 2018 (00:30 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி-20 போட்டி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பிரபலமாகி வருகிறது. ஒருசில மணி நேரங்களில் முடிவு தெரிந்து விடுவதாலும், விறுவிறுப்பான ஆட்டம் காரணமாகவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் விருந்தாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்டு 400 டி-20 போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்துள்ளார். 400 போட்டிகள் விளையாடிய உலகின் ஒரே வீரர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

மும்பை இந்தியன்ஸ் உள்பட பல அணிகளுக்கான டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்டு இந்த 400 போட்டிகளில் 7853 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 245 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒருசில ஆண்டுகள் விளையாடினால் அவர் 500 போட்டிகளில் விளையாடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஷ் அவுட்டை தவிர்க்குமா இந்திய அணி??