இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் நடக்கவிருந்த திருமணம், இரு குடும்ப உறுப்பினர்களின் திடீர் உடல்நல குறைவால் நவம்பர் 23ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சூழலில், ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு விளம்பர பதிவில் நிச்சயதார்த்த மோதிரம் அணியாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விவாதத்தை கிளப்பியுள்ளது.
அந்த விளம்பரம் நிச்சயதார்த்தத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்மிருதி தனது சமூக ஊடக பக்கங்களில் இருந்து திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கியதும் ஊகங்களை அதிகரித்துள்ளது.
எனினும், பலாஷின் தாயார் அமிதா, "உடல்நல காரணங்களுக்காகவே திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.