Publish Date: Mon, 07 Jun 2021 (08:30 IST)
Updated Date: Mon, 07 Jun 2021 (08:32 IST)
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ரவிச்சந்திரன் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார்.
அதில் அஸ்வின் ஒரு சிறந்த வீரர். அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர் என் ஆல்டைம் பேவரைட்டில் இல்லை. ஏனென்றால் SENA என சொல்லப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து. நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் ஒருமுறை கூட 5 விக்கெட்களை எடுத்தது இல்லை எனக் கூறியுள்ளார்.