எனக்கு விசா வழங்குங்கள் – சாய்னா நெஹ்வால் வேண்டுகோள் !

செவ்வாய், 8 அக்டோபர் 2019 (13:50 IST)
அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தனக்கும் தனது பயிற்சியாளருக்கும் விசா வழங்குங்கள் என பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் அடுத்த வாரம் நடக்க இருக்கும் டென்மார்க்கில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக அவருக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக ‘.அடுத்த வாரம் டென்மார்க்கில் உள்ள ஒடென்ஸில் நடைபெறும் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இருக்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு விசா வழங்கப்படவில்லை. எங்களுடைய போட்டிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது’ எனக் குறிப்பிட்டு அதில் வெளியுறவுத் துறை அமைச்சர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் “உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை