Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த விருதுகள்

Advertiesment
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த விருதுகள்
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (21:23 IST)
பிக்பாஸ் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் இதுவரை போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு கமல் விருதுகளை கொடுக்கும் நிகழ்வுகள் நடந்தது
 
இதில் கேம் சேஞ்சர் விருது: என்ற விருது கவினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கிய பின் கமல் கூறியபோது, ‘கவின் மட்டும் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்பதால் அவருக்கு இந்த கேம் சேஞ்சர் விருது என கூறி அவருக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.
 
அதனையடுத்து Guts and Grit விருதை வனிதாவுக்கு வழங்கிய கமல், ‘தனக்கு பாதகமாக இருக்கும் என்பதை தெரிந்தும் பிக்பாஸ் வீட்டில் தைரியமாக வனிதா செயல்பட்டதாகவும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.,
 
இதனையடுத்து தி மோஸ்ட் டிஸிப்ளின் என்ற விருது சேரனுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட சேரன் ’சினிமா தொழிலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கமல் அவர்களிடம் தான் ‘மகாநதி’ படத்தில் பணிபுரிந்தபோது கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
 
மேலும் சிறந்த நண்பர் விருதை ஷெரினுக்கு அளித்த கமல், இந்த விருதுக்கு அபிராமி கடும் போட்டியாக இருந்ததாகவும் இருப்பினும் ஷெரினுக்கு கிடைத்துள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.
 
கடைசியாக ஆல்ரவுண்டர் என்ற விருது தர்ஷனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை தர்ஷனுக்கு கமல் கொடுத்தபோது தர்ஷனின் தாயார் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் இந்த விருது மட்டுமின்றி தன்னுடைய  நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன் நடிக்கவிருப்பதாகவும் கமல் அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நா முத்துக்குமாரின் கவிதையைத் திரைப்படமாக எடுக்கும் வெற்றிமாறன் – ஹீரோவான சூரி !