ஒரேப் போட்டியில் 17 ஆவது இடம் – தரவரிசையில் ரோஹித் ஷர்மா முன்னேற்றம் !

செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:29 IST)
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரானப் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா தரவரிசையில் 17 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்று இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் இந்திய அணிக்கு புதிய தொடக்க ஆட்டக்காரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த இரு அபார இரு சதங்களின் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் 17 ஆவது இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார்.

அதேப்போல அஸ்வினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியதை அடுத்து பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

கோலி அதே இரண்டாமிடத்தில் இருந்தாலும் புள்ளிகளில் ஓராண்டுக்குப் பிறகு 900 க்குக் கீழ் குறைந்துள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கம்பீரின் கிரிக்கெட் முடிவுக்கு வந்தது என்னால்தான் – பாக் வீரர் சர்ச்சைப் பேச்சு !