Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:01 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து வந்தது தெரிந்ததே. ஆனால் ஐபிஎல் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்றும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை இந்த போட்டிகள் நடைபெற உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது 
 
மேலும் மத்திய அரசு சமீபத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வரும் 16ஆம் தேதி முதல் சென்னையிலும் 21ஆம் தேதி முதல் துபாயிலும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை எதிர்கொள்ள அனைத்து அணைகளும் தயார் நிலையில் இருக்கும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டும் திடீரென ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யக்னிக் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி கிடைத்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் ஒரு அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பீல்டிங் பயிற்சியாளராக மாற்று பயிற்சியாளரை ஏற்பாடு செய்ய அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments