Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011 உலகக்கோப்பை அரையிறுதி … சச்சினின் இன்னிங்ஸ் சிறப்பானது அல்ல! ஆஷிஷ் நெஹ்ரா கருத்து!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:20 IST)
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் எடுத்த 85 ரன்கள் சிறப்பான ஆட்டம் இல்லை என நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியாவைச் சேர்ந்த 130 கோடி பேரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது. அதற்கு அந்த போட்டியில் சச்சின் அடித்த 85 ரன்கள் முக்கியப் பங்காற்றின.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா சச்சினின் அந்த இன்னிங்ஸ் சிறப்பானது இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் ‘அந்த போட்டியில் சச்சின் மேல் அதிக அழுத்தம் இருந்தது. மேலும் அவருக்கு பல கேட்சுகள் விடப்பட்டன. அதனால் சச்சினுக்கே தெரியும் அது அவருடைய சிறப்பான இன்னிங்ஸ் இல்லை என்று’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments