ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பஞ்சாப் வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து போட்டிகளில் பஞ்சாப் அணி மூன்று வெற்றியும், இரண்டு தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல்தான் கொல்கத்தா அணி மூன்று வெற்றிகள் இரண்டு தோல்விகள் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுமே 6 புள்ளிகள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியின் முதல் நான்கு இடத்திற்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.
கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் நான்கு அல்லது ஐந்தாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்